search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடர் கொள்ளை"

    கல்பாக்கம் பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த பெண், வடமாநில வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அணுமின் நிலைய அதிகாரிகள் குடியிருக்கும் நகரியம் பகுதி வீடுகளில் கடந்த சில மாதங்களுக்கு முன் அடுத்தடுத்து நகைக்கொள்ளை நடந்தது.

    கொள்ளையர்களை பிடிக்க காஞ்சீபுரம் மாவட்ட எஸ்.பி சந்தோஷ் தனிப்படை அமைத்தார். அவர்கள் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர். அங்கு வீடுகளில் வேலை செய்யும் புதுப்பட்டினத்தை சேர்ந்த பெண் ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

    தனிப்படை போலீசார் அவரிடம் விசாரித்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் பானிபூரி விற்கும் வட மாநில வாலிபர்கள் இருவரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்பாக்கம் நகரியம் தொடர் கொள்ளை சம்பவங்களுக்கு அந்த பெண் மூளையாக செயல்பட்டாரா? எங்கெல்லாம் கொள்ளையடித்தார்கள்? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கும்பகோணம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் கடைவீதியில் நேற்றிரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள்  3 பேரும் முன்னுக்கு பின் முரணான பேசியதால் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர் . அப்போது அவர்கள் 3 பேரும் பல்வேறு இடங்களில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதும், மருதாநல்லூரில் நடந்த வழிப்பறியில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது, அவர்கள் திருநரையூர் ரமேஷ், திருமலை ராஜபுரத்தை சேர்ந்த ஜெயசீலன், மேலூரைச் சேர்ந்த நீலகண்டன் என்று தெரியவந்தது. மேலும் அவர்களிடம்  போலீசார் விசாரணை  நடத்தி  அவர்கள் பதுக்கி வைத்திருந்த 89 சவரன் நகைகளையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.22 லட்சம் ஆகும். 

    கைதான 3 பேரையும் நேற்று இரவு கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 3 பேரும் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
    அரியலூரியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசந்திரன். இவர் குடும்பத்துடன் 7.9.18 அன்று வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது பின்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே வந்த மர்மநபர்கள் ராமசந்திரன் மற்றும் அவரது மனைவி, மகள்களை தாக்கி விட்டு 6 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து திருமானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ஜெயங்கொண்டம் பெரிய வளையம் பகுதியை சேர்ந்த செல்வம் (48), திருவாரூர் மனக்கரையை சேர்ந்த பெரியபாண்டி ஆகிய 2 பேரை கைது செய்தனர். 

    விசாரணையில் அவர்கள் 2 பேரும் சேர்ந்து ராமசந்திரன் வீட்டில் 6 பவுன் கொள்ளையடித்ததும், அரியலூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் 2 பேரும் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதால் அரியலூர் மாவட்ட எஸ்.பி அபினவ்குமார் பரிந்துரையின் பேரில் கலெக்டர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத்
    தொடர்ந்து செல்வம், பெரிய பாண்டி ஆகிய 2 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டனர். 
    ×